நபர் ஒருவர் பயணி ஒருவரது தொலைபேசியை திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டபோது, தொடருந்தில் மோதி பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை Val-de-Marne மாவடத்தில் உள்ள Maisons-Alfort - Alfortville தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நடைமேடையில் காத்திருந்த பயணி ஒருவரிடம் இருந்து இரு திருடர்கள் தொலைபேசியை திருட முற்பட்டுள்ளனர். திருடர்களுடன் இடம்பெற்ற இழுபறியில் இரு திருடர்களில் ஒருவன் தண்டவாளத்தில் விழுந்துள்ளான். மறுமொடி அதிவேகமாக வந்த TGV தொடருந்து குறித்த திருடனை இடித்து தள்ளியது.
படுகாயமடைந்த திருடன் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டான்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.