ஜனவரி 10 ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கிறது.
ஒரு சில சேவைகளின் கட்டணங்களே அதிகரிக்கப்படுவதாக SNCF தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதலாம் வகுப்பு Liberté ஆசனங்களுக்கும், Première ஆசனங்களுக்கும் மற்றும் குறைந்த கட்டண பயண சேவைகளான Ouigo சேவைகளுக்கும் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன.
5 சதவீத கட்டண உயர்வை பயணிகள் இன்று முதல் எதிர்கொள்ளவுள்ளனர்.