பல்வேறு கட்ட சர்ச்சைகள், விவாதங்களின் பின்னர் இறுதியாக நவிகோ மாதாந்த கட்டணம் அதிகரித்துள்ளது.
நவிகோ மாதாந்த கட்டணம் €75.20 யூரோக்களில் இருந்து €84.10 யூரோக்களாக அதிகரிக்கிறது. இது 12 சதவீத விலை அதிகரிப்பாகும். முன்னதாக நவிகோ கட்டணம் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, மெற்றோ கட்டணத்தின் விலையும் €1.90 யூரோக்களில் இருந்து €2.10 யூரோக்களாக அதிகரிக்கிறது.
ஜனவரி 1, 2023 ஆம் ஆண்டு புத்தாண்டில் இருந்து இந்த விலையேற்றம் நடைமுறைக்கு வருகிறது.
Île-de-France Mobilités வெளியிட்ட ஊடக அறிக்கையில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
***
நவிகோ விலையேற்றம் தவிர்க்க முடியாதது என இல் து பிரான்சின் பொது போக்குவரத்து (Île-de-France Mobilités ) மேலாளர் Valérie Pécresse தெரிவித்திருந்தார். அதேவேளை விலையேற்றத்தை தவிர்க்க அரசிடம் இருந்து €450 மில்லியன் யூரோக்கள் பெரும் தொகையை கோரியிருந்தார். இந்நிலையில், அரசு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை €200 மில்லியன் யூரோக்கள் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது. அதையடுத்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இந்த நவிகோ கட்டண உயர்வு தீர்மானிக்கப்பட்டது.