பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வுக்காக வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது இந்த வேலைநிறுத்தத்தால் பாடசாலைகள். போக்குவரத்து போன்ற பொதுத்துறை பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்சில் தொழிற்சங்கங்கள் செவ்வாய் அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன.
தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பிரான்ஸ் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த கோரி நாட்டில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களாக தொடரும் இந்த வேலை நிறுத்தத்தினால் தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் எரிபொருள் விநியோகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் முதன்மையாக பொதுத்துறையை பாதித்துள்ளது. இதனால் பாடசாலைகளுக்கும் பல இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்தைப் பொறுத்தவரை வேலை நிறுத்தம் காரணமாக லண்டன் – பிரான்ஸ் ரயில்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் மற்றும் திங்களன்று இந்த விவகாரத்தை விரைவில் தீர்க்க அரசாங்கம் தன்னால் முடிந்த முயற்சி செய்யும் என்று உறுதி அளித்துள்ளார். அரசாங்கம் தொழிலாளர்களுக்கு உத்தியோகபூர்வ உத்தரவுகளை பிறப்பிக்க தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.