பிரான்சில் வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

சூரியனை சந்திரன் மறைக்கும் இந்த அரிதான நிகழ்வு வரும் செவ்வாய்க்கிழமை (ஒக்ட் 25) நண்பகல் வேளையில் இடம்பெற உள்ளதாக l'Institut de mécanique céleste et de calcul des éphémérides அறிவித்துள்ளது.

“இரண்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரம் மட்டும்” இது நீடிக்கும் எனவும், பிரான்சின் எப்பாகத்தில் இருந்தும் இதனை பார்க்கக்கூடியதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11.15 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சூரிய கிரகணம் பகல் 1 மணிவரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால், மீண்டும் இதுபோன்ற நிகழ்வு வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதியே இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.