கொவிட் 19 வைரஸ் பிரான்சில் தொடர்ந்தும் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொவிட் 19 தொற்று மற்றும் மருத்துவமனை நிலவரங்களை பொது சுகாதரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 59,653 பேருக்கு இந்த 24 மணிநேரத்தில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் 19,965 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1,041 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 131 பேர் மரணித்துள்ளனர். இவர்களில் 27 பேர் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் மரணித்துள்ளனர்.
அதேவேளை, இதுவரை கொவிட் 19 தொற்றினால் 156,640 பேர் மரணித்துள்ளனர். இவர்களில் 29,216 பேர் முதியோர் இல்லங்களில் மரணித்துள்ளனர்.
** இத்தகவல்கள் இன்று 25.10.2022 பொது சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது