McDonald's துரித உணவகத்தின் வாடிக்கையாளர் ஒருவரை தாக்கிய இரு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை Vélizy (Yvelines) நகரில் இரவு 11.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. Avenue de l'Europe வீதியில் உள்ள McDonald's உணவகத்துக்கு மகிழுந்தில் வருகை தந்த வாடிக்கையாளர் ஒருவருக்கும், உணவு விநியோகம் செய்யும் இரு இளைஞர்களுக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் முடிவில் குறித்த இரு இளைஞர்களும் சேர்ந்து வாடிக்கையாளரை தாக்கியுள்ளனர். அவர்களில் ஒருவன் கத்தி ஒன்றினால் வாடிக்கையாளரை பல இடங்களில் குத்தியுள்ளான்.

அதையடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். தாக்குதலுக்கு இலக்கான 26 வயதுடையவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருந்தபோதும், சில நிமிடங்களிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர். 18 மற்றும் 19 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டனர்