இளம் பிரெஞ்சுப் பெண்களிடம் உள்ளாடைகள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளதாகவும், பெருமளவான இளம் பெண்கள் மார்புக் கச்சை அணிவதில்லை எனவும் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில், பிரெஞ்சு பெண்களே அதிகளவில் மார்புக் கச்சைகள் அணிவதில்லை எனவும், குறிப்பாக சென்ற ஆண்டுகளில் கொவிட் 19 காரணமாக போடப்பட்டிருந்த உள்ளிருப்பு, ஊரடங்குகளின் பின்னர் இந்த பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பிரான்சில் வசிக்கும் 25 வயதுக்குட்பட்ட இளம் பெண்களில் 13% வீதமானவர்கள் மார்புக் கச்சை அணிவதில்லை எனவும், கொவிட் 19 பரவலுக்கு முன்பாக இந்த எண்ணிக்கை வெறும் 4% வீதமாக மட்டுமே இருந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
25 வயதுக்குட்பட்ட பெண்களில் ஸ்பெயினில் 3% வீதமாவர்களும், இத்தாலியில் 2% வீதமானவர்களும், பிரித்தானியாவில் 1% வீதமானவர்களும் மார்புக் கச்சை அணிவதில்லை எனவும், இந்த பட்டியலில் பிரான்ஸ் அதிகளவு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
* மேற்படி ஆய்வை XloveCam ஊடகத்துக்காக Ifop நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேந்த 5,039 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டிருந்தனர்.