Euromillions சீட்டிழுப்பில் €4.5 மில்லியன் யூரோக்கள் வெற்றியீட்டிய ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.

Hautes-Alpes மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் €4.5 மில்லியன் யூரோக்கள் ரொக்கப்பணத்தினை வெற்றியீட்டியிருந்தார். Euromillions அதிஷ்ட்டலாபச் சீட்டினை பெற்றுக்கொண்டு, அதில் குறித்த பணத்தொகையை வெற்றியீட்டிருந்தார். ஜூலை 12 ஆம் திகதி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

மொத்தமாக அவர் €4,572,731.40 யூரோக்களை வெற்றிபெற்றிருந்தார். ஆனால் அவரது பரிசுத்தொகையை பெற்றுக்கொள்ள இதுவரை அவர் முன்வரவில்லை.

அவர் இத்தொகையினை வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி, இரவு 11.59 மணிக்குள்ளாக பெற்றுக்கொள்ளவேண்டும். அதன்பின்னர் அவர் அத்தொகையை பெற்றுக்கொள்ள முடியாது.

வெற்றிபெற்றவர் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது