அரசாங்கத்தின் லீற்றருக்கு 18 சத சலுகை போக TotalEnergies உம் ஓட்டுனர்களுக்கு தனது உதவியை வழங்கவுள்ளது.

 
செப்டெம்பர் முதலாம் திகதி முதல் TotalEnergies எரிபொருள் நிலையத்தில் நிரப்பும் ஒவ்வொரு லீற்றருக்கும் 20 சதம் தள்ளுபடி என அறிவித்துள்ளது. 
பொருளாதார அமைச்சர் Bruno Le Maire இந்த முடிவை பாராட்டியுள்ளார். இந்த உதவி வாடிக்கையாளர் எரிபொருள் விலையேற்றத்தை சகித்துக்கொள்வதற்கு மிகவும் உதவும் என்பதையும் கூறியுள்ளார். 
 
அரசாங்க உதவி ஒக்டோபரில் 12 சதத்திற்கும் நொவம்பரில் 6 சதத்திற்கும் படிப்படியாகக்  குறைக்கப்படும் நிலையில் TotalEnergies நிறுவணத்தின் உதவி நொவம்பரிலிருந்து டிசம்பர் வரை மட்டுமே தனது சலுகையை 10 சதத்திற்குக் குறைக்கவுள்ளது. 
 
இந்த இரு உதவியும் 2023இல் இல்லாமல் போகும் என்பதும் தெரியத்தக்கது.