இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் Élisabeth Borne தனது பூஸ்ட்டர் தடுப்பூசியினை போட்டுக்கொண்டார்.

‘நான்கு மில்லியன் மக்கள் போல் நானும் எனவும் நான்காவது கொவிட் 19 தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளேன்!’ என பிரதமர் Élisabeth Borne தெரிவித்தார். 61 வயதுடைய பிரதமர் இன்று பரிசில் உள்ள தாதியர் அலுவகத்தில் இன்று தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இக்கோடை காலத்தில் தங்களது பேரப்பிள்ளைகளையும், தங்களது குடும்பத்தினரையும் சந்திக்கப்போகும் முதியவர்கள் அனைவரும் தங்களுக்கான நான்காவது தடுப்பூசியினை போட்டுக்கொள்ளவேண்டும்!’ எனவும் தெரிவித்தார்.

பிரான்சில் சராசரியாக நாள் ஒன்றில் 78,000 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்படுகிறமை குறிப்பிடத்தக்கது.