கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த எரிபொருட்களின் விலை, இவ்வாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

டீசலின் விலை 7 சதங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது. விலை வீழ்ச்சியின் பின்னர் தற்போது ஒரு லீற்றர் டீசலின் விலை €1.9946 யூரோக்களுக்கு விற்பனையாகிறது.

95-E10 பெற்றோலின் விலை 5 சதங்களினால் வீழ்ச்சியடைந்து தற்போது €1.982 யூரோக்களுக்கு விற்பனையாகிறது.

கடந்த வாரத்தில் €2 யூரோக்களுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்த பெற்றோல் மற்றும் டீசல் தற்போது €2 யூரோக்களுக்கு குறைவாக விற்பனையாகிறது.