ஜரோப்பிய நாடுகள் என்றதும் எழுகின்ற குளிர் உணர்வு இனிமேல் நெடுங்காலம் நீடிக்கப்
போவதில்லை. சமீப ஆண்டுகளில்
அதிகரித்துவந்த வெப்பம் இந்த முறை உச்ச சாதனைகளைத் தொட்டிருக்கிறது. 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெப்ப அதிகரிப்புக்குப்
பின்னர் அப்போதைய அளவை முறியடிக்கும் விதமாக இந்த ஆண்டு
பிரான்ஸ் அனல் தாக்கத்தைச் சந்தித்துள்ளது. நாட்டின் பல இடங்களில் காடுகள், புதர் நிலங்கள்
நெருப்புப் பற்றி எரிகின்றன. தீயை அணைப்பதற்காக ஆயிரக்கணக்கான தீயணைப்புவீரர்கள் விமானங்கள், வண்டி வாகனங்களுடன் இரவு பகலாகப் போராடி வருகின்றனர்.
பிரான்ஸில் தற்போதைய வெப்பம்
அடுத்த பத்துத் தினங்களாவது நீடிக்கும் என்றும் எதிர்வரும் திங்கட்கிழமை பாரிஸ் உட்பட நாடு முழுவதும் அதி உச்ச வெப்பநிலையைச் சந்திக்கலாம் என்றும் காலநிலை மையம் எதிர்வுகூறியுள்ளது. பாரிஸில் திங்கட்கிழமை நாற்பது பாகை வெப்பம் பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ஜரோப்பாவை வீச்சு அலையால் பாதித்திருக்கின்ற வெப்ப அனல் போர்த்துக்கல் முதல் துருக்கி வரை பிரித்தானியா முதல் பிரான்ஸ் வரை தாவரக் காடுகளை அழித்து வருவதுடன் பொதுமக்களின் நாளாந்த வாழ்வையும் பாதித்திருக்கிறது.
பல சுற்றுலா மையங்களில் உல்லாசப் பயணிகள் வெப்பம் தாங்க முடியாமல் வெளியேற்றப்பட்டுள்ளனர். போர்த்துக்கல் நாட்டின் வட பகுதி, ஸ்பெயினின் மேற்குப் பகுதிகள்
தீ அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கிரேக்கத்தில் சாமோஸ் தீவில் (island of Samos) தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிக்கொப்ரர் ஒன்று கடலில் வீழ்ந்ததால் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். பிரான்ஸில் நேற்றைய சுதந்திர தின அணிவகுப்புகளில் கலந்துகொள்ள
இருந்த மூன்று விமானங்கள் தீ அணைப்புப் பணிக்குச் செல்லவேண்டிய அவசர நிலைமை
ஏற்பட்டது. தீயை மூட்டக் கூடும் என்ற அச்சத்தால் நாட்டின் சில நகரங்களில் சுதந்திர நாள் வாணவேடிக்கை நிகழ்வுகள் ரத்துச்
செய்யப்பட்டன.
ஆண்டு தோறும் ஐரோப்பாவை நோக்கி இவ்வாறு மாமாறி மாறி அனல் காற்று தாக்கும் நிகழ்வுகளை காலநிலை அறிவியலாளர்கள் பூமி வெப்பமடைதலுடன் தொடர்புபடுத்து
கின்றனர்