நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, ஈஃபிள் கோபுரத்தின் மீது மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இரவு 10 மணி அளவில் இந்த மின்னல் தாக்குதல்கள் பதிவாகியிருந்தன. கடந்த சில நாட்களாக தலைநகர் பரிஸ் உட்பட நாடு முழுவதும் பலத்த வெப்பம் நிலவியதை அடுத்து, நேற்று மாலை திடீரென காலநிலை மாறியது. நாட்டின் பெரும்பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை இடம்பெற்றிருந்தது.

அதன் ஒரு பகுதியாக ஈஃபிள் கோபுரத்திலும் மின்னல் தாக்கியிருந்தது. இந்த தாக்குதலை பரிசைச் சேர்ந்த பலர் படம் பிடித்திருந்தனர்.