பிரான்ஸின் சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற முக்கியமான மூன்று நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டாக விடுத்திருக்கும் ஓர் அவசர
கோரிக்கையில் -
பெற்றோல், டீசல் எரிபொருள்கள், எரிவாயு மற்றும் மின் பாவனையை உடனடியாகக் குறைத்துக் கொள்ளுமாறு
பாவனையாளர்களைக் கேட்டிருக்கின்றனர்.
தற்போது எரிசக்திகளுக்கு ஏற்பட்டுள்ள
தட்டுப்பாடும் விலையேற்றமும் வரவிருக்கின்ற குளிர் காலப்பகுதியில்
நாட்டின் சமூகக் கூட்டிணைவினைப்
("social cohesion") பாதிக்கலாம் என்றும்
அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
TotalEnergies, EDF மற்றும் Engie ஆகிய
முக்கிய மூன்று நிறுவனங்களின் தலை
வர்களிடம் இருந்தே நாட்டுக்கு இந்த
அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவின் எரிவாயு விநியோகங்கள்
துண்டிக்கப்படுவதை அடுத்து ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போன்றே பிரான்ஸும் தனது எரிசக்திச் சேமிப்பை ப்பைக் குளிர்காலத்துக்கு முன்னரே
நூறு வீதமாக உறுதிப்படுத்திக் கொள்ள
முயற்சி செய்து வருகிறது. எரிவாயு
மற்றும் எரிபொருள்கள், மின் கட்டணங்கள் குளிர்காலப் பகுதியில் மேலும் விலை அதிகரிப்பையும் நெருக்கடியையும் உருவாக்கலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாழ்க்கைச் செல்வு அதிகரிப்பைச்
சுமக்க முடியாத நிலையில் உள்ள மக்கள் மத்தியில் எரிசக்திச் செலவு மேலும் பெரும் சுமையாக மாறிச் சமூகக் குழப்பங்களுக்கும் - அமைதியின்மைக்கும் வழிவகுத்துவிடலாம் என்று அஞ்சப்படுகிறது.