பிரான்சில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
‘Purchasing power’ என அழைக்கப்படும் ‘நுகர்வோர் வாங்கும் திறன்’ கடந்த ஒரு வருடத்தின் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக எரிபொருள், எரிவாயுவின் விலை மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடந்த ஒரு வருடத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த ஒரு வருடத்தின் பிரான்சில் பொருட்களின் விலை 5.8 வீதத்தால் அதிகரித்துள்ளதாக INSEE நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
INSEE கருத்துக்கணிப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் மேற்படி தகவல்களை இன்று ஜூன் 30 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.