variole du singe எனும் புதிய வகை அம்மை நோய் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான நபர் குறித்த சில தகவல்களை Île-de-France மாகாண பிராந்திய சுகாதாரத் துறை ( ARS Île-de-France ) வெளியிட்டுள்ளது. Île-de-France மாகாணத்துக்குள் இந்த தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார். 29 வயதுடைய ஒருவருக்கே இந்த குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது பெயர் விபரங்களை பிராந்திய சுகாதாரத் துறை வெளியிடவில்லை என்றபோதும், குறித்த நபர் அண்மையில் வேறு எந்த நாடுகளுக்கும் பயணித்திருக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் முதலில் தோன்றிய இந்த குரங்கு அம்மை நோய், கடந்த மே மாத ஆரம்பத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவியிருந்தது. இந்நிலையிலேயே முதன் முறையாக Île-de-France மாகாணத்துக்குள் இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் நோயாளியுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே பரவும் எனவும், அவர்களை நேரடியாக தொடுவதோ, அவர்களது உடைகளை அணிவதாலோ தொற்று பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.