2023 ஆம் ஆண்டு வரை மின்சார கட்டண அதிகரிப்பு இல்லை என பிரான்சின் பொருளாதார அமைச்சர் Bruno Le Maire அறிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை அவர் இதனை தெரிவித்துள்ளார். “நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2023 ஆம் ஆண்டு வரை மின்சார கட்டணத்தின் அதிகரிப்பு செய்யப்போவதில்லை. பிரெஞ்சு மக்கள் மின்சார கட்டணத்தில் எந்த ஒரு அதிகரிப்பும் நிகழப்போவதில்லை!” என அவர் தெரிவித்தார்.

அதேவேளை, பிரெஞ்சு எரிசக்தி அணைக்குழு (Commission de régulation de l'énergie - CRE) தரப்பில் தெரிவிக்கையில், பணவீக்கம் காரணமாக மேலதிகமான €2 பில்லியன் யூரோக்கள் ‘மேலதிக நிதி உதவி’ தேவைப்படுவதாகவும், அரசு அதைச் செலுத்தவேண்டும் எனவும், அல்லது மின்சார கட்டணம் 8% வீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.