பிரான்ஸ் உணவகங்களில் கோடை காலத்துக்குரிய வேலைவாய்ப்புக்கள் மிகவும் குறைவாக காணப்படுவதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரானா காரணமாக வருட கணக்கில் முடங்கிய தொழில்,சற்று ஏற்றம் காணும் நேரத்தில் கோடை விடுமுறைகாலத்தில் waiter வேலை வாய்ப்புக்கு மக்கள் பெரிதாக விருப்பம் காட்டுவது குறைந்துள்ளதாகவும் இதனால் உணவக தொழிலில் குறிப்பிடதக்க நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரானாக்கு பின்னரா காலப்பகுதியில் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்கள்,நாட்டு நிலைமைகள் உணவக தொழிலில் நம்பக தன்மையை குறைத்துள்ளதுடன் அதற்கு மாற்றான பல தொழில் வாய்ப்புக்கள் சமூகத்தில் வந்துள்ளதையும் ஒரு காரணமாகும்.

எனினும் பிரான்ஸுக்கு தொடர்ந்து புலம்பெயரும் மக்கள் கூட்டத்தை கொண்டு உணவக தொழிலை சிறப்பாக நடாத்துவதற்கான நம்பிக்கையை பல உணவக உரிமையாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.அத்துடன் காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் உணவக தொழில் மிண்டெழும் என்று நம்புகின்றனர்.