பரிசில் உள்ள கட்டார் தூதரகத்துக்கு முன்பாக சற்று முன்னர் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டார் நாட்டின் தூதரகத்துக்கு முன்பாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டமைக்குரிய காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

அதேவேளை, சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அறிய முடிகிறது.

தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பரிஸ் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.