பிரான்சில் அகதிகளாக உள்ள உக்ரேனிய மாணவர்கள் பாடசாலையில் பிரெஞ்ச் மாணவர்களை விட கணித துறையில் இயல்பாக சிறந்து விளங்குவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட 16,000 உக்ரேனிய சிறுவர்களை யுத்தம் காரணமாக தங்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.அவர்கள் தமது பிரஞ்சு வகுப்பு தோழர்களை விட கணிதத்தில் சிறந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன் ஆசிரியர்களும் அவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.
கணித துறையில் அவர்கள் சிறந்து விளங்குவதற்கு அவர்களது மரபுவழி தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸில் உள்ள தமிழ் மாணவர்களும் இவர்களுக்கு போட்டியாக கணித துறையில் முன்னிற்க வேண்டிய தேவை உள்ளது.இன்று உலகமே கணித துறை சார்ந்தவர்களால்தான் இயக்கப்படுவதுடன்,பெரிய பெரிய கம்பனி பொறுப்புக்களில் உள்ளவர்களும் கணித துறை சார்ந்தவர்களே நியமிக்கபடுகிறார்கள். காரணம் கணித அறிவு இயல்பாக அதிகமாக இருப்பவர்கள் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க கூடியவர்களாகவும்,தலைமைதுவ பண்புகள்,முடிவெடுக்கும் திறன்களில் மற்றவர்களை விட அதிகம் சிறந்து விளங்குகின்றனர்.
ஈழ தமிழர்கள் ஊரில் கணித துறைக்கே முன்னுரிமை கொடுத்து பிள்ளைகளை தலைமுறை தலைமுறையாக வளர்த்து வந்தனர்.இன்றைய உலக மாற்றங்களில் சிறிது தடுமாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் தமிழ் பிள்ளைகளின் கணித திறன் என்பதும் மரபுவழி தொடர்ச்சி போன்றதே…
ஆக இன்று வந்த உக்ரைன் மாணவர்கள் என்பதை தாண்டி எமது தமிழ் பிள்ளைகள் பிரான்ஸில் கணித துறையில் சாதித்தே ஆக வேண்டும்.அதற்குரிய கவனத்தை சிறு வயதில் இருந்தே எடுத்து கொள்ள அவர்களை பழக்க வேண்டும்.பெற்றோர்களும் தம் பிள்ளைகளின் படிப்பு விடயத்தில் எல்லா பாடத்தில் புள்ளிகள் எடு என்று வீணாக வெட்டி முறிவதை விடுத்து கெட்டிகாரதனமாக கணித துறையில் அதீத சிறப்பு புள்ளிகளை பெற ஊக்கப்படுத்த வேண்டும்.
கட்டுரையினை முடிந்த வரை உங்கள் உறவுகள்,நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி