கடல்கடந்த தீவுகளில்
வாக்களிப்பு ஆரம்பம்
பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகப் பகுதிகளில் அதிபர் தேர்தலின் இறுதிச்
சுற்று வாக்களிப்பு சனிக்கிழமையே
தொடங்கியுள்ளது. பெருநிலப் பரப்பில்
ஞாயிறு காலையிலேயே வாக்களிப்புத்
தொடங்கவுள்ள நிலையில் தொலைதூர
தீவுகளில் நேர வித்தியாசம் காரணமாக
வாக்களிப்பு முன்னதாகவே ஆரம்பித்துள்
ளது.
கனடா கரையோரம் அமைந்துள்ள Saint-Pierre-et-Miquelon தீவுக் கூட்டங்களில்
பாரிஸ் நேரப்படி இன்று சனிக்கிழமை
நண்பகல் வாக்களிப்புத் தொடங்கியது.
தொடர்ந்து கயானாவிலும் பசுபிக் மற்
றும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் இந்து
சமுத்திரத்திலும் நேரகாலத்துடன் வாக்
களிப்புத் தொடங்கவுள்ளது.
பிரான்ஸின் பெரு நிலப்பரப்பு முழுவதும்
சகல வித தேர்தல் பரப்புரைகளும் வெள்
ளிக் கிழமை நள்ளிரவு முதல் முடிவுக்கு
வந்துள்ளன. பொதுக் கூட்டங்கள், துண்
டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், வேட்பாளர்களின் டிஜிட்டல் பரப்புரைகள்
அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.
அதே போன்று ஞாயிறு இரவு எட்டு மணி
க்கு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை
வேட்பாளர்களது நேர்முகங்கள், வாக்களி
ப்பு கணிப்புகள் மற்றும் எதிர்வு கூறல்கள்
எதனையும் வெளியிடுவதும் தடைசெய்
யப்பட்டுள்ளது.
48.7மில்லியன் வாக்காளர்கள் நாட்டின்
புதிய அதிபரைத் தெரிவு செய்யவுள்ள
னர். ஆனால் இம்முறை வாக்களிக்கத்
தவறுவோரது வீதம் மேலும் அதிகமாக
இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
முதலாவது சுற்றில் வாக்களிக்காதோர்
வீதம் 26.31%ஆக இருந்தது. பாரிஸ் உட்பட
சில வலயங்களில் பாடசாலை விடுமுறை
தொடங்குவதும் வாக்களிப்பைப் பாதிக்
கக் கூடும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
வாக்களிப்பு வீதத்தில் ஏற்படும் வீழ்ச்சி
வேட்பாளர் மக்ரோனின் வெற்றி வாய்ப்
பினையே பாதிக்கக் கூடிய நிலைவரம்
காணப்படுவதாக அரசறிவியல் நிபுண
ர்கள் மதிப்பிடுகின்றனர்.மக்ரோன் தனது
துணைவியார் சகிதம் வடக்கு கரையோர
நகரமான Touquet இல் (Pas-de-Calais) தங்
கியிருக்கிறார். அங்குள்ள கடற்கரையில்
இருவரும் தோன்றும் படங்கள் வெளியா
கியுள்ளன.
படம்:1-பசுபிக் தீவில் வாக்களிப்பு.
2-Touquet கடற்கரையில் மக்ரோன்
தம்பதிகள்.