நான்கு வட்டாரங்களில் (Commune) ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லு பென் ஒரு வாக்குக்கூட பெறவில்லை.

Le Clat (Aude) எனும் சிறு வட்டாரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மரீன் லு பென் ஒரு வாக்கு கூட பெறவில்லை. இங்கு பதிவு செய்யப்பட்ட 31 வாக்காளர்களில் 26 பேர் மாத்திரமே வாக்களிக்க வருகை தந்தனர். அவர்களில் 1 வாக்கு செல்லாத வாக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 பேரும் இம்மானுவல் மக்ரோனுக்கே வாக்களித்தனர்.

அதற்கு அடுத்ததாக Haute-Garonne இல் உள்ள இரண்டு சிறு வட்டாரங்களில் இதே போன்ற சம்பவம் இடம்பெற்றது. இங்குள்ள Baren (12 வாக்குகள்) மற்றும் Caubous (7 வாக்குகள்) ஆகிய இரு வட்டாரங்களில் மரீன் லு பென் ஒரு வாக்கு கூட பெறவில்லை.

அதேபோல், Haute-Corse இல் உள்ள Alzi எனும் வட்டாரங்களில் வாக்களித்த 34 பேர்களில் ஒருவர் கூட மரீன் லு பென்னு வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*
நேற்று இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் இம்மானுவல் மக்ரோன் மற்றும் மரீன் லு பென் ஆகிய இருவரும் மோதினர். இதில் இம்மானுவல் மக்ரோன் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் முடிவுகளை கீழுள்ள இணைப்பில் காணலாம்!