இலங்கையில் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பணவீக்கம் 21 வீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி மிகவும் மோசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இன்றையதினம் மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்த தரவுகள் வெளியாகி உள்ளன.
அதற்கமைய யூரோ ஒன்றின் விற்பனை விலை 372 ரூபாவாகவும் கொள்வனவு விலை 360 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 342 ரூபாவாகவும் கொள்வனவு விலை 330 ரூபாவாகவும்
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 440 ரூபாவாகவும் விற்பனை விலை 324 ரூபாவாகவும்
சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 359 ரூபாவாகவும் கொள்வனவு விலை 346 ரூபாவாகவும்
கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 270 ரூபாவாகவும் கொள்வனவு விலை 259 ரூபாவாகவும் பதிவாகி உள்ளன.
இதேவேளை இலங்கையின் கறுப்பு சந்தையில் டொலர் மற்றும் யூரோ 400 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.