தலைநகரின் நிர்வாக விடயங்களில் நாட்டின் அதிபருக்கே இல்லாத பல அதிகாரங்கள் நகர சபை மேயரிடம் இருக்கின்றன.பாரிஸின் கேந்திர இடங்களில் ஒன்றாகிய ஈபிள் கோபுரத்தை கடந்த ஞாயிறு இரவு - வெற்றி உரையின் போது-விசேடமாக ஜொலிக்க விடுவதற்கு மக்ரோன் விரும்பியிருந்தார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது .
பாரிஸின் சோசலிஸ்ட் மேயராகிய ஆன் கிடல்கோ அதற்கு அனுமதிக்கவில்லை
என்று "லு பிகாரோ" (le Figaro) செய்திச்சேவை தெரிவித்துள்ளது. ஈபிள் கோபுரம் அமைந்துள்ள சோம்ஸ்-து-மாஸ்(Champ-
de-Mars)பகுதியில் வெற்றி உரையாற்று வதற்கு அனுமதி வழங்கிய நகர மேயர், அந்த சமயத்தில் ஈபிள் கோபுரத்தை வழமைக்கு மாறாக ஒளிர விடுவதற்கு மறுத்து விட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அதிபர் தேர்தலில் சோசலிஸக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட நகர மேயர் ஆன் கிடல்கோவுக்குத்
தனது வாக்கைச் செலுத்தவில்லை என்று
அவரது புதல்வரும் நீச்சல் வீரருமாகிய ஆர்தர் ஜேர்மான் (Arthur German) தெரி
வித்திருக்கிறார்.
"நான் என் அம்மாவுக்கு வாக்களிக்கவில்லை. ஜோன்-லூக் மெலன்சோ
னுக்கே வாக்களித்தேன், உண்மையில் வலுவான நம்பிக்கையால் அல்ல. அவர் சொல்வது புத்திசாலித்தனம் என்று நான் நினைத்ததால் அல்ல. ஆனால் ஆறாவது குடியரசை உருவாக்க வேண்டும் என்ற அவரது யோசனை, அது உலகமயம் பற்றி மக்கள் கேள்விகள் கேட்க உதவும் ஒரு வழியாகும்” என்று ஆர்தர் ஜேர்மான் விளக்கினார்.
அதிபர் தேர்தல்"மோசமான முறை" என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்த அவர் , இரண்டாவது சுற்றில் பங்கேற்காமல் இருக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.