Pyrénées-Atlantiques)மையத்தில் இந்த சனிக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் 19 முதல் 20 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த சனிக்கிழமை அதிகாலையில் பேயோன் (Pyrénées-Atlantiques) மைய வீதியில் இந்த விபத்து நடந்துள்ளது. அதிகாலை 5 மணியளவில் வீதி அருகே இருந்த பனை மரத்தில் கார் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து Bayonne நகரின் மேயர் Jean-René Etchegaray, “நான்கு பயணிகளுடன் சிறிய வாகனம் Biarritz-Bayonne திசையில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அது தரையில் இருந்த பனை மரங்களில் ஒன்றில் மோதியது என தெரிவித்தார்.
அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என்று Bayonne இன் துணை-தலைவர், Philippe Le Moing-Surzur, பிராந்திய நாளிதழான Sud-Ouest க்கு தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் SMUR சம்பவ இடத்திற்கு விரைந்து நான்கு பேரையும் குற்றுயிராக மீட்டனர். இருப்பினும் மருத்துவர் பரிசோதித்து போது அவர்கள் அனைவரும் உயிரிழந்திருந்தனர்.
காரில் இருந்த நான்கு இளைஞர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அவசர சேவைகள் குறிப்பிடுகின்றன. இந்த சாலை விபத்துக்கான காரணங்களை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.