பிரான்ஸில் வாகனம் வைத்திருக்கும் மக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளர்.

வாகனம் வைத்திருக்கும் மக்கள் வாகனத்தில் தங்களை பைகளை விட்டு செல்ல வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக வாகனத்தில் விட்டு செல்லப்படும் பைகள் திருடப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

பைகளை விட்டு செல்லும் போது வாகனத்தின் கண்ணாடி உடைத்து திருடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸின் பல பகுதிகளில் வாகனத்தை நிறுத்தி செல்லும் மக்களின் பைகள் திருடப்பட்டுள்ளதுடன் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கண்ணாடிகளில் பைகளை அவதானிக்கும் நபர்களை கண்ணாடியை உடைத்து உள்ளே உள்ள பைகளையும் பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்று விடுகின்றனர்.

சத்தம் வராத வகையில் கண்ணாடிகள் உடைக்கும் தொழில்நுட்பம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறிய தேவைகளுக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு கடைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் பைகள் கையடக்க தொலைபேசிகள் போன்றவற்றை வாகனத்திலேயே விட்டு செல்வதாக தெரியவந்துள்ளது.

எனினும் இவ்வாறு திருடும் நபர்கள் ஒரு சில நிமிடங்களில் கண்ணாடியை உடைப்பதற்கும் பழக்கம் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாகனத்திற்குள் வைக்கும் பெறுமதியான பொருட்கள் வெளியே தெரியாத வகையில் பார்த்துக் கொள்ளுமாறு இல்லை என்றால் கையில் எடுத்து செல்லுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்காக பிரதான நகரங்களில் உள்ள சீசீடீவி கமராக்களின் உதவிகளை பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.