ஹாட்-கரோன்: சிறையில் இருக்கும் காதலன் வீட்டில் கொள்ளையடித்த காதலி,தன் காதலன் சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி அவனது குடியிருப்பிற்க்குள் நுழைந்து அங்கிருந்து சுமார்
13,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளார்.

சிறையிலிருந்த 25 வயது இளைஞர் ஒருவர் ஏப்ரல் மாத தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டார். விடுதலையைத்தொடர்ந்து துலூஸுக்கு தெற்கே உள்ள Saint-Gaudens இல் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் இந்நிலையில் பூட்டப்பட்டிருந்த அவரது வீட்டினுள் இருந்த கடிகாரம் உட்பட்ட 13000 யூரோக்கள் பெறுமதியான பிராண்டட் பொருட்கள் பல காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதில் மிகவும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், பூட்டப்பட்டிருந்த வீட்டு கதவு உடைக்கப்படவில்லை மற்றும் திருடப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதனையடுத்து அவர் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார். விரைவில், விசாரணைகளை முன்னெடுத்த புலனாய்வுத் துறையினர்
அவரது வீட்டிற்கான மாற்று சாவியை வைத்திருந்த அவருடைய முன்னாள் காதலியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் குறித்த யுவதியின் வீட்டை ஆய்வு செய்தனர்.

ஆய்வுகளின் போது இளைஞரின் வீட்டில் காணாமல் போயிருந்த சில பொருட்கள் யுவதியின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் புதன்கிழமையன்று போலீஸ் காவலில் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார்.