பரிசில் சட்டவிரோதமாக இயங்கும் சில நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை அறிவித்துள்ளது.
பரிசில் உள்ள ‘விரைவு விநியோக நிறுவனங்கள்’ (de livraison ultra-rapide) சில, அனுமதி பெறாத ‘சேமிப்பகங்களை’ (entrepôts) வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பல பிரபல நிறுவங்களும் உள்ளடங்குகின்றது. கிட்டத்தட்ட 65 சேமிப்பங்கள் பரிசில் உள்ளதாகவும், அவற்றுக்கான முறையான அனுமதியினை இந்த நிறுவங்கள் பெறவில்லை எனவும் நகரசபை அறிவித்துள்ளது.
இந்த நிறுவனங்களில் Cajoo, Gorillas, Flink, Glovo, GoPuff, Yango Deli, Zapp, Rohlik, Bam courses, Frichti, Deliveroo மற்றும் Uber Eats போன்ற பிரபரல நிறுவனங்கள் உள்ளடங்குகிறது.
இந்நிறுவனங்களின் 65 சட்டவிரோதமாக திறக்கப்பட்ட சேமிப்பகங்கள் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், அதில் முதல்கட்டமாக 45 சேமிப்பகங்கள் மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் நகரசபை அறிவித்துள்ளது.