Notre-Dame தேவாலயம் தீப்பற்றி எரிந்து, மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில் அதுதொடர்பான குற்ற விசாரணைகளின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, நோர்து-டேம் தேவாலயம் தீப்பிடித்து எரிந்ததற்கு பின்னால் எந்தவித குற்றச் செயல்களும் இல்லை எனவும், ‘இது ஒரு விபத்து!’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வந்த la brigade criminelle de la direction centrale de la police judiciaire அதிகாரிகள் நேற்று புதன்கிழமை இந்த விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி அன்று நோர்து டேம் தேவாலயம் தீப்பிடித்து எரிந்திருந்தது. உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த இச்சம்பவம் குறித்த விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதன் விசாரணை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.