இம்மானுவல் மக்ரோன் வழங்கிய சலுகையை இரஷ்யாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் ஏற்க மறுத்துள்ளார்.

அண்மையில், Marina Ovsiannikova எனும் இரஷ்யாவின் பெண் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. தாம் கடமையாறும் தொலைக்காட்சி ஒன்றில் நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது, திடீரென திரைக்கு முன்னால் ஓடிச் சென்று ‘யுத்தம் வேண்டாம். இங்கு போலியான தகவல்கள் வெளியிடப்படுகிறது!’ என பதாகை ஒன்றை பிடித்துக்கொண்டு நின்றுள்ளார்.

பின்னர் உடனடியாக அந்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதையடுத்து, அவருக்கு பிரான்சில் ஆதரவு அளிக்க மக்ரோன் முன்வந்திருந்தார். பிரான்சில் குடியுரிமை வழங்கி, பாதுகாப்பும் வழங்குவதாக சலுகை அளித்திருந்தார்.

ஆனால் அந்த சலுகையை அப்பெண் ஊடகவியலாளர் நிராகரித்துள்ளார். “நான் ஒரு போராளி. நான் யுத்தத்துக்கு எதிராக போராடுகிறேன். எனது மகனும் தான். நாங்கள் நாட்டை விட்டு வெளியேறமாட்டோம்!” என தெரிவித்துள்ளார்.