Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெருமளவான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Bagneux (Hauts-de-Seine) நகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 8 கிலோ எடைகொண்ட கஞ்சா மற்றும் கொக்கைன் போதைப்பொருட்கள், கைத்துப்பாக்கி ஒன்றும், சில ஆயிரம் யூரோக்கள் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக இந்த வீட்டை தலையிடமாக கொண்டு போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வந்ததாக காவல்துறையினர் மேற்கொண்டுவந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.