ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீண்டும் இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் உரையாடியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியூடான இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. இரஷ்யா-உக்ரைன் மோதலை அடுத்து இதுவரை பலதடவைகள் விளாடிமிர் புட்டினுடன் உரையாடியுள்ள மக்ரோன், மீண்டும் நேற்று உரையாடினர்.

இதில் ‘இரஷ்யா-உக்ரைன் யுத்த நிறுத்தம்’ தொடர்பாக மக்ரோன் உரையாடியதாகவும், ஆனால் இதில் எந்த ஒரு உடன்படிக்கைகளும் எட்டப்படவில்லை எனவும் அறிய முடிகிறது.

எலிசே மாளிகையின் ஊடகப்பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது