Aulnay-sous-Bois நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணி அளவில் இத்தீவிபத்து இடம்பெற்றுள்ளது. இங்குள்ள 10 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது. கட்டிடத்தின் ஏழாவது தளத்தில் பரவ ஆரம்பித்த தீ, பின்னர் வேகமாக மேலுள்ள தளங்களுக்கும் பரவியுள்ளது. அதையடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

குறித்த கட்டிடத்தில் உறங்கிக்கொண்டிருந்த 100 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

2 மணிநேரங்களின் பின்னர் தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.