பிரான்சில் மதங்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் எச்சரித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் பிரான்சில் 1,659 குற்றச் செயல்கள் மதங்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளன. இதில் பாதிக்கும் மேல் 52% வீதமானவை (857 சம்பவங்கள்) கிருஸ்தவ மதத்துக்கு எதிராக இடம்பெற்றுள்ளன.
589 சம்பவங்கள் யூத மதத்துக்கு எதிராகவும், 213 சம்பவங்கள் இஸ்லாம் மதத்துக்கு எதிராகவும் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, இத்தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் வெறுமனே 14% வீதமானோரை மட்டுமே கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதங்களுக்கு எதிரான வன்முறை மற்றும் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் Jean Castex எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது