நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை RATP ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து, ட்ராம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ பாதிகப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வைக்கோரி இந்தவேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை இடம்பெறுகிறது. வேலை நிறுத்தத்தின் போது சில RER சேவைகளும், பேருந்து சேவைகள் மற்றும் ட்ராம் சேவைகளும் தடைப்படுகிறன. குறிப்பாக T1, T2, T3a, T3b, T5, T6 மற்றும் T7 ஆகிய ட்ராம் சேவைகள் நெருக்கடியான வேலை நேரத்தில் (Peak Hours) மூன்றில் ஒரு சேவை மட்டுமே இயங்கும் என அறிய முடிகிறது. T8 சேவை அன்றைய நாள் முழுவதும் தடைப்பட உள்ளது.
தடைப்படும் RER சேவைகள்- மெற்றோ மற்றும் பேருந்து சேவைகள் குறித்த விரிவான தகவல்கள் பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெற்றோ சேவைகளில் 2, 7, 8, 9 மற்றும் 13 ஆகிய சேவைகள் தடைப்படலாம் எனவும், பேருந்து சேவைகளில் 30% வீதமானவை தடைப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.