பிரான்ஸ் முழுவதும் பருவ காய்ச்சல் பரவி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் அது தொற்று நோயாக மாறி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுகாதார அதிகாரசபை வெளியிட்ட வாராந்திர அறிக்கைக்கமைய, பிரதான பகுதிகளில் அனைத்திலும் காய்ச்சல் பரவல் அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த காய்ச்சலின் அதிகரிப்பினால் அது தொற்று நோயாக மாறி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை தொற்றுநோயைத் தவிர்த்த ஒரே பிராந்தியமாக இருந்த கொர்ஸிகாவும் தற்போது காயச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்த அழுத்தத்தில் இருந்த மருத்துவமனைகள் தற்போது முதல் கட்ட நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயம் காய்ச்சல் பருவத்தின் உச்சம் இம்முறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தமையினால் பருவ காய்ச்சல் சற்று குறைவான நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் சமூகங்களில் அதிகமாக கூடுவதனால் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.

அதேவேளை முகக் கவசம் நீக்கப்பட்டமையினால் இந்த காய்ச்சல் தொற்று நோயாக மாறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.தமிழர்கள் சிலரும் எமது செய்தி சேவைக்கு தமது புதிய காய்ச்சல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்திருந்தனர்.சாதாரண காய்ச்சல் கூட வித்தியாசமாக வருவதாக மேலும் அவர்கள் தெரிவித்தனர்.உறவுகள் கவனமாக இருங்கள்.