பிரான்ஸின் வல்-டீ-ஒய்ஸ் பிராந்தியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலில் பிரபல கார் நிறுவனத்தின் கிளை விற்பனை நிலையத்தில் தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

தகவலறிந்த 84 தீயணைப்பு பிரிவினர் களத்தில் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்தின் போது எவரும் காயங்களுக்கு உடபடவில்லை என்றும் 20 ஊழியர்கள் அங்கிருந்து பாதுக்காப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதற்கட்ட விசாரணைகளிலிருந்து சுமார் 2000 சதுர மீற்றர் அளவில் அமைக்கப்பட்டிருந்த மிக விலை உயர்ந்த கார்களை விற்பனை செய்யும் நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளமை தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது