பரிசில் உள்ள musée Grévin அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த விளாடிமிர் புட்டினின் உருவச் சிலை அகற்றப்பட்டுள்ளது.

பரிசில் உள்ள le musée Grévin அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டிருந்த மெழுகு சிலையே அகற்றப்பட்டுள்ளது. விளாடிமிர் புட்டின் பல உலக நாடுகளை எதிர்த்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றார். பிரான்ஸ் தரப்பில் பல தடவைகள் கோரிக்கை வைக்கப்பட்டும் யுத்தம் நிறுத்தப்படவில்லை. இதனால் எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக விளாடிமிர் புட்டினின் உருவச் சிலை அகற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி Xi Jinping ஆகியோரின் மெழுகு சிலைகளுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த இந்த விளாடிமிர் புட்டினின் சிலை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது