ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் பங்கேற்கும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், ஜனாதிபதி மக்ரோன் பங்கேற்க மாட்டார் என அறிவித்திருந்தார்.
மக்ரோனின் இந்த ‘மறுப்பு’ உடனடியாக விவாதப்பொருளாக மாறியுள்ளது. பிரெஞ்சு ஜனநாயகத்தின் குறியீடாக பார்க்கப்படும் இந்த விவாத நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க மறுத்தமை தொடர்பில், அரச ஊடக பேச்சாளர் Gabriel Attal விளக்கமளித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “விவாத நிகழ்ச்சியில் 12 வேட்பாளர்கள் கலந்துகொள்வார்கள். 1.50 மணிநேரம் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 10 நிமிடங்கள் வழங்கப்படும். இதனால் கேள்விக்கு பதிலளிக்க மக்ரோனுக்கு போதிய அவகாசம் இல்லை” என Gabriel Attal தெரிவித்தார்.