வெள்ளியன்று Valenciennesல், சரக்கு ரயிலில் ஏறிக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுமார் ஐம்பது பேர், மற்றும் புலம்பெயர்ந்தோர், Valenciennes நிலையத்தில் (Nord) மௌன அஞ்சலி செலுத்தினர்

புலம்பெயர்ந்தோர்கள் “எல்லைகள் கொல்கின்றன” என்ற வாசகத்தைத் தாங்கிய காகிதத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கில் ஒரு மெழுகுவர்த்தியைச் ஏற்றி தமது அஞ்சலியை தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இறந்த இளைஞர்கள் மின்சார வளைவில் சிக்கி பலியாகினார்,வெள்ளியன்று, எரித்திரியாவைச் சேர்ந்த வாலிபர்கள், வாலன்சியன்ஸில் ரயிலில் ஒளிந்து கொள்ள முயன்றபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.

மார்ச் 1 அன்று, கலேஸ் அருகே ரயில் பாதையில் நடந்து சென்றபோது, ஒரு சூடான் குடியேற்றவாசி ரயிலில் மோதி கொல்லப்பட்டார். நவம்பர் 4 அன்று, டன்கிர்க் மற்றும் கலேஸ் இடையே தண்டவாளத்தில் பயணித்த நான்கு புலம்பெயர்ந்தோர் குழு மீது ரயில் மோதியது, ஒரு மரணம், ஒரு கடுமையான காயம் மற்றும் இரண்டு சிறிய காயங்கள் ஏற்பட்டன. கடல் வழியாக இங்கிலாந்துக்கு செல்லும் முயற்சியில் 2021 இல் குடியேறிகள் 38 பேர் கொல்லப்பட்டனர்