ரக்பி விளையாட்டு வீரர் ஒருவர் பரிசில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை 6 மணி அளவில், Boulevard Saint-Germain (6ஆம் வட்டாரம்) பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆர்ஜண்டினாவின் முன்னாள் சர்வதேச ரக்பி வீரரான Martín Aramburú (வயது 42) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மதுபான விடுதி ஒன்றில் குறித்த ரக்பி வீரருக்கும் - விடுதியின் மற்றொரு வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.இவர் மீது ஐந்து தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், Martín Aramburú சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கருவிகளின் உதவியோடு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.