பாரிஸில் ஒரு இளம் மன நோயாளி காணவில்லை! குறித்த சிறுவனை கண்டுபிடிக்க காவல்துறையினர் மக்களின் உதவியை நாடியுள்ளனர். மார்ச் 3 முதல், 14 வயதான இப்ராஹிம் சிஸ்ஸே என்ற சிறுவன் காணவில்லை.

மன இறுக்கம் கொண்ட சிறுவன், அன்று தான் இருந்த பாரிஸின் 12வது வட்டாரத்தில் உள்ள ஹோட்டலை விட்டு எங்கோ சென்றுவிட்டார். இந்த செவ்வாய்க் கிழமை, மார்ச் 22, சிறார்களின் பாதுகாப்பிற்கான படையணி, இளைஞனைக் கண்டுபிடிப்பதற்காக சாட்சிகளுக்கான அழைப்பைத் தொடங்கியது.

ப்ராஹிமின் புகைப்படத்துடன் தொடர்புடைய தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது. அவர் காணாமல் போன நேரத்தில், இப்ராஹிம் சிஸ்ஸே சாம்பல் நிற ஜாகிங், ஃபிளீஸ், ஒரு குயில்ட் ஜாக்கெட் மற்றும் வெள்ளை ஸ்னீக்கர்களை அணிந்திருந்தார்.

விசாரணையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தகவல் உள்ள எவரும் பாரீஸ் நீதித்துறை காவல்துறையின் பொதுப் பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் 0800 00 27 08 வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் அணுகக்கூடிய கட்டணமில்லா எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்.