RER B சேவையினை பயன்படுத்தும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

2021 ஆம் ஆண்டில், RER B தொடருந்து சேவைகள் மிக மோசமான காலதாமதத்தை சந்தித்துள்ளது. இதனால் இந்த சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது. இழப்பீடு தொகையாக ஒரு மாத அல்லது 15 நாட்களுக்குரிய கட்டணம் வழங்கப்பட உள்ளது.

இந்த இழப்பீடு தொகையை வழங்குவதற்காக வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. RER B சேவைகளின் தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது பெயரினை பதிவு செய்து, இழப்பீடினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், Navigo Annuel, Senior, imagine R Étudiant அல்லது Scolaire, Navigo Mois போன்ற அட்டைகளை பயன்படுத்தியவர்கள் இந்த இழப்பீடு தொகையை பெற விண்ணப்பிக்க முடியும்.