முகக்கவசம் அணிவது தொடர்பான கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மூடப்பட்ட உள்ளக இடங்களில் (lieux clos ) முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இந்த தளர்வு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக இந்த தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேளை, பொது போக்குவரத்துக்களில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிவது தொடர்ந்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா பரவல் வீழ்ச்சியடைந்து வருவதை அடுத்து இந்த தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
தடுப்பூசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த தளவு கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது