காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம் மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை Noisy-le-Grand (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Damien C எனும் அதிகாரி Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வந்திருந்தன.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் மரணமடைந்து மூன்று நாட்களின் பின்னரே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.