காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய ஒருவர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை Dreux (Eure-et-Loire) நகரில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, சந்தேக நபர் ஒருவர் மகிழுந்தில் பயணிப்பதை பார்த்துள்ளனர். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவர் மகிழுந்தை நிறுத்தாமல், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

காவல்துறையினர் அவரை துரத்திச் சென்றனர். ஆனால் அவர் நிற்காமல் தொடர்ந்து தப்பிச் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் காவல்துறையினர் அவரை துரத்துவதை நிறுத்தியுள்ளனர்.

தப்பி ஓடிய நபர் ஆச்சரியமாக 160 கிலோமீற்றர் தூரம் சென்று Mareil-le-Guyon, (Yvelines) நகருக்குள் நுழைந்துள்ளார். அங்கு எதிர்பாரா விதமாக அவர் விபத்துக்குள்ளானர். கனரக வாகனம் ஒன்றுடன் மகிழுந்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மகிழுந்தை செலுத்திய குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

குறித்த நபர் திருட்டு வழக்கு மற்றும் போதைப்பொருள் விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.