மாலியில் உள்ள பிரெஞ்சு இராணுவத்தினரை தாமதமின்றி திரும்ப அழைக்கும் படி மாலி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மாலியின் Barkhane மற்றும் Takuba பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளாக பிரெஞ்சு இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அண்மைய நாட்களில் இரு நாடுகளுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அங்கு நிலைகொண்டுள்ள பிரெஞ்சு இராணுவத்தினரை திரும்ப அழைப்பதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்றி மாலி நாட்டின் ஊடக பேச்சாளர் தெரிவிக்கையில், ‘பிரெஞ்சு இராணுவத்தினரின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை. மிக விரைவாக அவர்களை திரும்ப அழையுங்கள்’ என பிரெஞ்சு அரசிடம் அவர் தெரிவித்துள்ளார்.
மாலி அரசின் இந்த பொறுப்பற்ற அறிக்கை பிரெஞ்சு தரப்பினரை மேலும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.