நேற்று வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாக உரையாடியுள்ளார்.

உக்ரைன் மீது இரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலை நிறுத்தும் படி மக்ரோன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை மீண்டும் தொலைபேசியூடாக விளாடிமிர் புட்டினுடன் மக்ரோன் தொலைபேசியூடாக உரையாடியுள்ளார்.

‘உக்ரைன் மீது இரஷ்யா தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு, அங்கிருந்து வெளியேறவேண்டும்!’ என மக்ரோன் விளாதிமிர் புட்டினிடம் கோரிக்கை வைத்ததாக அறிய முடிகிறது.

நேற்றைய தினம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், எலிசே மாளிகையில் உக்ரைனுக்கு ஆதரவாக- ஐரோப்பிய ஒன்றிய கொடிகளுக்கு முன்பாக உக்ரைன் நாட்டு கொடியை பறக்கவிட்டு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இரஷ்யா தாக்குதல் ஆரம்பித்த 24 மணிநேரத்தில் உக்ரைனில் 100,000 குடும்பங்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், சில ஆயிரம் வரையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறிய முடிகிறது.