பிரான்சில் ஒமிக்ரோன் பரவல் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் Olivier Véran தெரிவிக்கையில், ஒமிக்ரோனா பரவல் 77% வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும், நாள் ஒன்றில் பரவிய அதிகபட்ச தொற்று கடந்த ஜனவரி 25 ஆம் திகதி பதிவானது (366,000 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது) எனவும், அதனோடு ஒப்பிடுகையில் இந்த பெரும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதேவேளை, கடந்த ஏழு நாட்களில் சராசரியாக 86,000 தொற்றுக்கள் பிரான்சில் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய வாரத்தில் 145,000 பேருக்கு சராசரியாக தொற்று ஏற்பட்டிருந்ததையும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்